Thursday, March 1, 2012

அடுத்து மார்கெட் எங்கே?

படத்தை பெரிதாக பார்க்க அதை கிளிக்கவும்!




இதில் நிஃப்டி எங்கேயும் சப்போர்ட்டை ப்ரேக் பண்ணாமல் மேலேயே சென்று சொண்டிருப்பது தெரியும்.
இவ்வருடத்தின் ஆரம்பத்தில் யாராவது நிஃப்டி வாங்கி வைத்திருந்தால் குறைந்த பட்ச லாபம் 50*1000=50000

ஆம் ஆயிரம் பாயிண்டுகள் ஏறிய பிறகு இப்பொழுது



இந்த டேலைன் சார்டை வைத்து பார்க்கும் பொழுது 5322 என்பது நல்லதொரு தாங்குநிலை, ஒருவேளை அதை உடைத்தால் நிஃப்டி 5130/5050 வரை வரக்கூடும் அப்பொழுது மீண்டும் முதலீடு செய்வது நல்லது.

மாறாக,

ரைட் மார்க் இருக்கும் 5443 க்கு மேல் குளோஸானால் மார்கெட் அடுத்த ரெஸிஸ்ட் லெவலான 5618 க்கு வரும், அதையும் உடைத்தால் இவ்வருடத்தில் நிஃப்டி 8000 தொடும் என்பது மார்கெட் சொல்லும் செய்தி!

உங்கள் சந்தேகங்களை 9994500540 என்ற எண்ணில் என்னை அழைத்து தெளிவு படுத்திக்கொள்ளலாம்.
மார்கெட் முடிந்த பிறகு 3.30 திலிருந்து நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன்.

நீங்கள் ஏற்கனவே ட்ரேடராக இருந்தால் உங்கள் போர்ட்ஃபோலியோவை எனக்கு அனுப்பி வையுங்கள்.
எதை வைத்திருக்கலாம், எதை கொடுத்து விடலாம் என்ற ஆலோசனை முதன்முறை இலவசமாக!

arunero@gmail.com

5 comments:

  1. பங்கு சந்தை பற்றி தெரியாதவர்களுக்கு சில பதிவுகள் போடலாமே... எனக்கு ஒண்ணுமே புரியல :(

    ReplyDelete
    Replies
    1. முதலீட்டு மேலாண்மை:

      இது ஒன்றும் பெரிய சூத்திரம் இல்லை. நீங்கள் முதல் முதலாகச் சென்னை சென்று வர வேண்டும். உங்கள் அப்பா, அம்மா அல்லது பாஸ் யாரோ ஒருவர் 1000 ரூபாய் கொடுத்து சென்று வரச் சொன்னால், ஜெட் ஏர்வேய்ஸ் சென்று சென்னைக்கு கட்டணம் கேட்டால் 4500 என்கிறான். இது சரிப்பட்டு வராது என்று நல்ல ஒரு ட்ராவல்ஸ் ஆம்னி பஸ்ஸில் கேட்டால் அவன் எழுநூறு என்கிறான், ஏனென்றால் அது ஏசி கோட்சாம். போய் விடலாம், ஆனால் திரும்பி வரப் பணம் போதாது என்பதால், அதுவும் ரத்து.


      இறுதியாகப் புகைவண்டி முன்னூறு தான்...அடடா போக வர அறநூறு தான். ரெடி சூட்டென்று கிளம்பிவிடுவோம் இல்லையா? அதுபோல்தான் முதலீட்டு மேலாண்மை என்பது. ஒவ்வொரு மார்க்கெட்டிலும் ஒவ்வொரு விதமான அணுகுமுறையில் முதலீட்டு மேலாண்மை செய்ய வேண்டும்.

      ஆனால் இது ஒன்றில் மட்டும் நீங்கள் சரியாகக் கற்று அதன் படி நீங்கள் நடந்து விட்டால்... உங்களுக்கு லாபம் வருவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.
      நஷ்டம் வராது என்று அர்த்தம் இல்லை, நஷ்டத்தை விட லாபம் அதிகம் பெறலாம். கிணற்றின் ஆழம் எவ்வளவோ அதனை விட கயிறின் நீளம் அதிகமாக இருந்தால் தான், கிணற்றில் தண்ணீர் அள்ள முடியும். அதுபோல மார்க்கெட்டின் ஆழத்தை விட நம் அறிவின் நீளம் அதிகம் இருப்பின் அள்ள அள்ளப் பணம் தான்.
      நான் எத்தனை முறை கேட்டாலும் இதைத்தான் சொல்வேன், மார்கெட்டில் ஒரு அரைமணி நேரத்தில் உங்கள் பணத்தைக் கொண்டு நிச்சயம் லாபம் சம்பாதிக்க சொல்லித் தர முடியும், ஆனால் அதன் படி நீங்கள் நடப்பதில் தான் வெற்றி இருக்கிறது. மறுபடியும் சொல்கிறேன் 99.99% மார்க்கெட்டில் வெற்றி பெறுவதற்கு பொறுமையான, உறுதியான மனநிலை தான் முக்கியம்.

      இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு குடிமகனிடமும் ஆளுக்குப் பத்து லட்சம் கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பணம் வாங்கியவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. அடுத்த வருடம் இதே நாளில் வாருங்கள் என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள்.
      கொடுத்த வாய்ப்பு அனவருக்கும் சமமானது. ஆனால் அடுத்த வருடம் ஒரு பிரிவினர் பத்து லட்சத்தை இருபது லட்சமாகப் பெருக்கி இருகிறார்கள், சில பிரிவினர் பத்து லச்சமும் போய் சில லட்சங்கள் கடன் வேறு, சிலரிடம் கூடவும் இல்லை, குறையவும் இல்லை, சிலரிடம் எதுவும் இல்லை. இந்த வேறுபாடு எப்படி வந்தது? அவர்கள் மனதளவில் எப்படி அதனைப் பயன் படுத்தினார்களோ அதனுடைய வெளிப்பாடு தான் இது. முதலீட்டு மேலாண்மையில் மனநிலைதான் மிக மிக முக்கியம்...அது போதிய பயிற்சியின் வாயிலாகக் கட்டாயம் பெறலாம்.

      atozforexdetails.blogspot.com
      9500535386

      Delete
  2. http://anindianviews.blogspot.com/2012/02/2g_14.html

    உண்மையா?கொஞ்சம் விளக்குங்க

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பேராசையின் அளவைப் பொருத்து அவர்களின் வாக்குறிதிகள் இருக்கும். ஆனால் ஒரு முறையான வழிகாட்டி, ப்ரொபசனல் ட்ரேடர் நீங்கள் சொல்வதற்கு எல்லாம் தலையை ஆட்ட மாட்டார். அதில் உள்ள ரிஸ்க் பாக்டர் (ரிஸ்க்கின் அளவுக் காரணங்கள்) கட்டாயம் சொல்வர்.

      ஒரு முறையான வழிகாட்டியிடம், ப்ரொபசனல் ட்ரேடரிடம் அவரிடம் ஏற்கனவே நல்ல முறையில் லாபத்தோடு ட்ரேடில் இருக்கும், கிளைன்ட்களின் அக்கௌன்ட் சமரி கட்டாயம் இருக்கும். என்னிடம் 2007 to 2013 வரை உள்ள அனைத்து கிளைன்ட்களின் சமரி உண்டு. பலரின் அக்கௌன்ட் அவர்கள் எடுக்கும் ரிஸ்க் பொருத்து மூன்று மடங்கு லாபம் கூட வந்து இருக்கிறது. அவர்களின் சொந்த விபரம் தவிர அனைத்தையும் நீங்கள் செக் செய்து பார்க்கலாம். சில கிளைன்ட்கள் அவர்களின் சொந்த விபரம் கூட தருவார்கள்.

      சில முறையான வழிகாட்டிகள், ப்ரொபசனல் ட்ரேடர் அதிகபடியான வாக்குறுதிகள் தருவதில்லை. நான் என்னிடம் உள்ள கிளைன்ட்களுக்கு எப்போதும் சொல்வது இதுதான், நான் மாதம் இவ்வளவு தருகிறேன் என்று என்னால் கட்டாயம் சொல்ல முடியாது. ஆனால் உங்கள் முதலுக்கு நான் உத்திரவாதம் தர முடியும். நீங்கள் ஒரு 30% ரிஸ்க் எடுக்கத் தயார் என்றால் என்னால் ஒரு மூன்று முதல் நான்கு வருடங்களில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க முடியும்.
      50% ரிஸ்க் எடுக்கத் தயார் என்றால் இரண்டு முதல் மூன்று வருடங்களில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்க முடியும். ஆனால் மாதம் மாதம் இவ்வளவு கிடைக்கும் என்பதை என்னால் 100% உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில் மார்க்கெட் ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
      நன்றாக யோசியிங்கள் 4 வருடத்தில் இரட்டிப்பு என்பது 4*12 = 48 மாதங்கள், தோராயமாக மாதத்திற்கு நான் 2.08% லாபம் தருவதாக மட்டுமே நான் உத்திரவாதம் தருகிறேன். அதுமட்டும் இல்லை உங்கள் முதலீடு 70% அப்படியே இருக்கும். ஆனாலும் நான் மாதா மாதம் இவ்வளவு கிடைக்கும் என்று உறுதி சொல்வது கிடையாது. சில மாதங்களில் 5% கூட கிடைத்து இருக்கிறது. அதற்கு மேல் ரிஸ்க் எடுப்பது கிடையாது.
      ஒரு ப்ரொபசனல் ட்ரேடர் கண்டிப்பாக உங்கள் முதுகில் சவாரி செய்ய மாட்டார்கள். லாபம் வந்தால் மட்டும் பங்கு, நஷ்டம் வந்தால் எனக்குத் தெரியாது என்று கை கழுவ மாட்டார்கள். அவர்கள் முதலீட்டு நிர்வாகம் பற்றி நன்கு அறிந்து இருப்பதால், ரிஸ்க்கின் அளவினை அழுத்தம் திருத்தமாக சொல்லிவிடுவார்கள். சிலர் ஒரு அளவிற்கு மேல் ரிஸ்க் எடுப்பதே இல்லை. மேலும் அவர்களின் முதலீடு மேலாண்மை பேங்க்கின் சிஸ்டம் பாலோ செய்வதால் நீண்ட கால முறையில் குறைந்த ரிஸ்க்கில் அதிக வருமானம் கிடைக்கும் வகையில் இருக்கும். பேங்க் ஒரு லட்சத்திற்கு அதிகம் மாதம் எழுநூறு தான் தருகிறார்கள் என்பதால் வெறும் பத்து சதவிகிதம் கூட ரிஸ்க் இல்லை, ஆதலால் தான் பேங்க்கின் நம்பகத்தன்மை இன்றும் குறையாமல் இருக்கிறது. ஆனால் போரெக்ஸ் மார்கெட்டில் ஒரு ஐந்து ஆண்டுகளில் மட்டுமே எவ்வளவு பிரச்சனைகள்?

      என்னைக் கேட்டால் கஷ்டப் பட்டு சம்பாதித்த பணத்தை பத்திரமாகப் பாதுகாப்பதும் ...உங்கள் கடமை தான். பேங்க்கில் முதலீடு செய்தால் என்ன வருகிறதோ? அதைக் காட்டிலும் ஒரு ஐந்து மடங்கு ரிஸ்க் எடுப்பதே போதுமானது என்பேன்.


      வீண் வாக்குறிதிகளை நம்பி முதலீடு செய்ய வேண்டாம். முதலுக்கே மோசம் போகும் சூழ்நிலை வரும் போது தான், அசலாவது கிடைத்தால் பரவா இல்லையே என்று மனம் ஏங்கும். அதுவரை மனம் அங்க எவ்வளவு? இங்க எவ்வளவு தராங்க? என்றுதான் குழம்பும், குருடன் வழி குருட்டு வழி தான். இருவரும் குழியில் விழுவதைதக் கூடவே போய்த் தடுக்க யாரும் முடியாது. குழி இருக்கும் பாத்துப் போனு சொல்லத்தான் முடியும்.

      atozforexdetails.blogspot.com
      9500535386

      Delete
  3. இவ்வருடத்தின் ஆரம்பத்தில் யாராவது
    நிஃப்டி வாங்கி வைத்திருந்தால்// iruthal , iruthal ? always there in market who really buy and sold now no one in world.

    ReplyDelete