Sunday, January 29, 2012

வருக! வருக!

பங்கு சந்தை பற்றிய சந்தேகங்கள் மற்றும் முதலீட்டு முறைகளை அறிய துவக்கப்பட்ட வலைப்பூ இது.

முதலீடு செய்ய விருப்பமுள்ளவர்கள், செய்தவர்கள் அனைவரும் உங்கள் கேள்விகளை கேட்கலாம்.

பெயர் வெளியிட விருப்பமில்லையென்றால் தனி மின்னஞ்சலாக தொடர்பு கொள்ளலாம், பெயர் வெளியிடப்படாமல் தகவல் வெளியிடப்படும்.

அந்த வலைப்பூவின் தலைப்பு நன்றாக வருமானம் பெற அதாவது to earn well.

earn பண்ணனும் அதை ஏன் பண்ணனும் என என் தாத்தா ஒருத்தர் அடிக்கடி சொல்வார் என என் தந்தை சொல்வார்.

இந்தியாவில் பலருக்கு இன்சூரன்ஸ் என்றால் என்னவென்று தெரியாது, நாட்டில் 80% சதவிகிதித்திற்கு மேல் வங்கி கணக்கு கிடையாது, வரி என்றால் என்னவென்றே தெரியாமல் அதை கட்டி கொண்டிருக்கிறார்கள்(மறைமுகமாக) அவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த சிறு குழுக்களுக்கு இலவச செமினார் எடுக்கவும் தயாராக உள்ளோம்.

பங்கு சந்தை சூதாட்டம் என பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படி பார்த்தால் உலகில் எல்லாமே சூதாட்டமாகத்தான் இருக்கிறது, உனக்கு ஒன்று கிடைத்தால் எங்கேயோ ஒருவனுக்கு அது இழப்பாக இருக்கிறது என்பது தான் உலகின் பொருளாதார விதி. தொழிலில் வெற்றி அடைந்தவனும் சரி, தோல்வி அடைந்தவனும் சரி இதை ஒப்புக்கொள்வான்!

பங்கு வணிகம் மற்றும் கமாடிடி பற்றி இலவசமாக அறிய இந்த வலைப்பூவை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்!

நன்றி

5 comments:

  1. thangalin varaveTRpiTRkku nandri!

    ReplyDelete
  2. வணக்கம் வால் பையன் ,
    பங்கு சந்தைல எனக்கு அக்கான ஆவானா கூட தெரியாது .10 ரூபாய்க்கு வாங்கி 12 ரூபாய்க்கு வித்தா , கமிசன் போக 1 .50 காசு லாபம் . இப்படி தான் என்னோட பங்கு சந்தை அறிவு. நான் எங்க இருந்து எப்படி தொடங்கணும். எதுல முதலீடு செய்யணும். ஒரு 10 ,000 துல இருந்து 20 ,000 ஆயிரம் கைல இருக்கு. இதுல என்னத்த செய்ய முடியும்னு நினைகிறீங்க.? கொஞ்சம் பயமாவும் இருக்கு. மார்கெட்டுல உச்சரிக்கிற terminalogy கேட்டா ஒன்னுமே புரிய மாட்டேங்குது . டீமேட் கணக்கு ஒன்னு தொடங்கணும் . யாருகிட்ட தொடங்கறதுன்னு ஒரே குழப்பம். Axis பாங்க்ல அக்கௌன்ட் இருக்கு. ஆனா நண்பர்கள் சேர்க்கான்ல ,இல்லன ரெலிகியர்ல தொடங்குன்னு சொல்லுறாங்க. இதுக்கு எல்லாம் உங்க அட்வைஸ் என்ன ? மெட்டல்ல intra trade எப்படி பண்ணுறது ? மொதல்ல trade எப்படி பண்ணுறதுன்னு ஒரு சிறிய பதிப்ப போட்டீங்கன்ன என்ன மாதிரி ஆசாமிகளுக்கு உதவியாய் இருக்கும். ஒரு டீமேட் கணக்கு தொடங்கிட்டு உங்களை கூப்பிடுறேன்.

    ReplyDelete
  3. மார்க்கெட் மிகப் பெரிய சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.இந்த மார்க்கெட்டில் பணம் பண்ணுவது சற்று கடினம் என்றாலும் முறையான சந்தை நிலவரங்கள் தெரியும் பட்சத்தில் பணம் சம்பாதிப்பது பெரிய விஷயம் அல்ல. பலர் மார்க்கெட் ஒரு சூதாட்டம் என்கிறார்கள், இது ஒரு முட்டாள் தனமான கூற்று. ஏனெனில் சூதாட்டம் என்பது அதிர்ஷ்டம் சம்பந்தமான விஷயம் ஆனால் மார்க்கெட் என்பது அறிவு சம்பந்தப்பட்ட விஷயம். அதிர்ஷ்டத்தை நம்பி மார்கெட்டில் நுழைந்தால் எல்லா நாளும் பணம் சம்பாதிக்க இயலாமல் போவதுடன் மிகப்பெரிய நஷ்டத்தையும் சந்திக்க நேரிடும்.

    நாம் முதலீடு செய்கிற எல்லா பணமும் நமக்கு நஷ்டம் ஆகிற பட்சத்தில் அந்தப் பணம் யாரோ ஒருவருக்கு லாபமாகப் போய்ச் சேருகிறது என்பது தான் இந்த மார்க்கெட்டில் நடக்கிற விஷயம். நாம் லாபம் பெற போதிய அளவு சந்தை அறிவு இல்லாத பட்சத்தில் நாம் மார்க்கெட்டினை குறை சொல்வது நம் அறியாமையே.

    ReplyDelete
  4. அன்பான நண்பர்களே, எந்த ஒரு துறையிலும் நாம் கால் பதிப்பதற்கு முன்னால், அந்த துறையைப் பற்றிய முன் அனுபவம் கொஞ்சமாவது இருக்க வேண்டும். அதனால் தான் ஒவ்வொரு போரெக்ஸ் டிரேடிங் கம்பெனி ( forex trading company ) யும் டெமோ ( demo ) அக்கௌன்ட் இலவசமாக தருகிறார்கள். அந்நிய நாடுகளில் இலவசமாக தர வேண்டும் என்பது கட்டாய சட்ட மாகவே உள்ளது.

    எனவே உங்கள் பணத்தினை போரெக்ஸ் மட்டும் அல்ல எந்த ஒரு மார்கெட்டில் முதலீடு செய்வதற்கு முன்னால், முறையான பயிற்சி அவசியம். எதற்கு நான் சொல்கிறேன் என்றால், மார்கெட்டில் லாபம் வரும்போது வரும் மகிழ்ச்சியின் மன நிலையை விட , நஷ்டம் வரும் போது வரும் மன நிலையின் வலி மிக மிக மிக ...அதிகம் . அதற்காக பயப்பட வேண்டாம். முறையான டெமோ நமக்கு ஓரளவு பயிற்சியை தரும்.
    atozforexdetails.blogspot.com
    9500535386

    ReplyDelete
  5. பெரும்பாலோனோர் ஏன் லாபம் பெற இயலவில்லை?


    இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தால் ஒரு வருடம் கூட பிளாக் எழுதலாம். அவ்வளவு விஷயம் இருக்கிறது. முக்கியமானதை முதலில் சொல்கிறேன்.


    ஒரு முறைப்படுத்தப் பட்ட கல்வி இல்லை:

    நம் நாட்டில் ஒரு அரசியலவாதி ஆக எப்படி ஒரு கல்வித் தகுதி தேவை இல்லையோ, அது போலத்தான் ட்ரேடுக்கும் ஒரு முறையான கல்விக் களம் இல்லை. ஏனெனில் அது தேவையும் இல்லை, யார் வேண்டுமானாலும் ட்ரேடு செய்யலாம் என்ற ஒரு நிலையே உண்டு. அது மாத்திரமல்ல டிரேடு என்பது ஒரு அறிவு நிலை சார்ந்தது, என்று சொல்வதை விட அது ஒரு மன நிலை சார்ந்தது. வெறும் 10% ட்ரேடிங் அறிவு இருந்தால் போதுமானது. மீதம் 90% மனநிலை ( Trading Pshycology) சார்ந்தது. நாம் எப்படி நீந்துவது என்று ஆயிரம் புத்தகங்களைப் படிப்பதை விட ஒரு முறை நீரில் குதிப்பது மேலானது. அனுபவம் பெறப் பெற நம் மனநிலை நிச்சயம் மாறும். ஆனால் வாழ்க்கை என்றால் என்ன என்று புரிவதற்குள் வாழ்க்கை முடிவது போல, டிரேடில் வெற்றி பெரும் மன நிலை அடைவதற்குள் 99% டிரேடர்களுக்கு அக்கௌண்டில் பணம் முடிந்து விடுகிறது.
    9500535386

    ReplyDelete